பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி – சேலை விநியோகம் செய்யும் பணியை நகர செயலாளர், பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தொடர்ந்து பள்ளிகொண்டா பெரிய மசூதி தெரு மற்றும் சாவடி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கும் பணியை நகர செயலாளர் ஜாகிர் உசேன், பேரூராட்சி தலைவர் சி.சுபபிரியா குமரன், துணை தலைவர் வசீம்அக்ரம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நகர செயலாளர் ஜாகீர் உசேன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
இன்று தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா பேரூராட்சி பொறுத்தவரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளும் ரேஷன் கடைகள் மூலம் அனைவருக்கும் வினியோகிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.