BREAKING NEWS

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.

பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

 

 

இதற்கு கடமலை-மயிலை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதி, வட்டார வளமைய பயிற்றுநர் ஜெயசுசிலா முன்னிலை வகித்தனர். எட்டப்பராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி பால்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

பள்ளி தலைமையாசிரியர் கண்ணன்அனைவரையும் வரவேற்றார். இப்போட்டிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

 

 

இதில் நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கருவி இசை, நடனம், ஓவியப்போட்டி, மொழித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.

 

போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுத்தேவர், கிராம கல்வி குழு தலைவர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )