பழனி கல்லூரியில் அரசு சித்த மருத்துவர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைகல்லூரியில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் உயரிய இலக்கானத்தால் சைனிக் முகாமில் கலந்து கொண்டு டென்ட் பிட்சிங் ஈவன்ட் – இல் தமிழ்நாடு அணியில் இடம் பெற்று, வெண்கல பதக்கம் வென்ற தமிழ் துறை இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியாவை அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் சந்தியாவின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்க பரிசம் வழங்கப்பட்டது.
மேலும் பேச்சு போட்டி மற்றும் எழுத்துப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சித்த மருத்துவர் மகேந்திரன் வழங்கினார்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடம் பேசிய மகேந்திரன் அனைவரும் இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
மேலும் மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுவதுடன் தன்னுடைய உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் கலையரசி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக சித்த மருத்துவர் மகேந்திரன் கலந்துகொண்ட அனைவருக்கும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விழிப்புணர்வாக மஞ்சள் பைகளை வழங்கினார்.