பழனி திருக்கோயிலில் சுமார் 2 கோடி செலவில் சிறப்பு அன்னதானம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அன்னதானத்தை குடமுழுக்கு அரங்கில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் கலந்து கொண்டார்.
முன்னதாக பழனி குறிஞ்சி மில் உரிமையாளர் கணேசன் மற்றும் குழுவினர் இந்த அன்னதானத்திற்கு உபயோதாரராக ஏற்றுக்கொண்டு கடந்த 23ஆம் தேதி முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை அன்னதானம் செய்து வருகின்றனர்.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பங்கு கொண்டு சமையல் செய்து வருகின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நபர்கள் உணவு பரிமாறும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பழைய நாதஸ்வர பள்ளி, கோசலை வளாகம், குடமுழக்க அரங்கம் ஆகிய மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.