பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி பாரதி கலையரங்கத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களோடு மாடுகளை அழைத்து வந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் வழங்கி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் வழக்கறிஞர் சி.ஆர். கிருஷ்ணன் வழக்கறிஞர் கவிமணி பழனிச்சாமி, சுந்தரம், சரவணன், கணேசன், மருதமுத்து, ரகுபதி, செல்வம், பால சேகர், லோகநாதன்,ரமணி, சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களுக்கு தலப்பாகை அணிவித்து கரும்பு வழங்கி மரியாதை செய்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மாடுகளுக்கு மரியாதை செய்யும் விழாவில் பொங்கல் வைத்து அனைத்து பொது மக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
மேலும் உச்சி காளியம்மன் கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன.