BREAKING NEWS

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம்,

உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் தக்கரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்தாண்டு கடந்த ஏழாம் தேதி திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலின் தக்கார் ஜெயப்பிரியா தலைமையில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சுமார் பத்து லட்சம் வரை நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், நன்கொடை பெற்றதற்கான ரசீது முறையாக வழங்கப்படவில்லை என்றும், மேலும் கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படவில்லை என என புகார் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து இது குறித்து கோவில் கமிட்டி உறுப்பினர்கள் இந்த நன்கொடை வசூல் முறைகேட்டில் ஈடுபட்ட தக்கார் ஜெயப்பிரியா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS