பவானியில் மீண்டும் மஞ்சப்பை திட்ட துவக்க விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பவானி நகர அனைத்து வணிகர் சங்கம், சிறு குரு வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது.
பவானி வட்டார பேரமைப்பு தலைவர் B.S. சுந்தரராஜன் தலைமை வகித்தார். செயலாளர் காதர்அலி வரவேற்று பேசினார். தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் பத்ரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் கொடியேற்றி வைத்தார்.

பின்னர் அவர் வியாபாரிகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி துவக்கி வைத்தார். ஹான்ஸ், பான்பராக் உட்பட போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்த படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பயன்படுத்துவது இல்லை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பேரணியை விக்ரம ராஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணி பவானி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் சென்று முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் பவானி நகர திமுக செயலாளர் நாகராசன், பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி, நகர்மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
