BREAKING NEWS

பவானி அருகில் உள்ள பெருமாபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.

பவானி அருகில் உள்ள பெருமாபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.

ஈரோடு, பவானி அருகில் உள்ள காலிங்கராயன்பாளையம், மேட்டு நாசுவம்பாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைந்தது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி யாகசாலை கால்கோள் விழா உடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. பின்னர் முதல் கால் யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 

 

 

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால மகா யாக வேள்வி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புனித நீர் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ சக்தி விநாயகருக்கும், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் இராஜ கோபுரத்திற்க்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

 

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பெருமா பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

 

CATEGORIES
TAGS