பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுகவினர் உணவு வழங்கினர்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக காவிரி ஆற்றில் ஒரு விநாடிக்கு1. 33 லட்சம் கன அடி தண்ணீர் உபரிநீராக திறந்து விடப்படுகிறது.
ஈரோடு : இதனைத் தொடர்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றங்கரையின் ஓரத்தில் வசித்து வரும் பல்வேறு குடும்பத்தினர் வீடுகளில் தண்ணீர் புகுந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் 2, 4, 20 ஆகிய வார்டுகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு இரவு முட்டையுடன் கூடிய பிரியாணி மற்றும் இட்லி கோழி கறி போன்ற உணவு வகைகளை 250 குடும்பத்தினருக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், எம்.ஜி. நாத் என்கிற மாதையன், மம்மிடாடி மூர்த்தி, கரேத்தா பெரியசாமி, மோகன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.