பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம்,
இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
உள்ளூர் குதிரை, 43 இன்ச், 45 இன்ச் மற்றும் பெரிய குதிரை என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் ஜாக்கிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது.
உள்ளூர் குதிரைகளில் தினேஷ் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், சின்னு பிரதர்ஸ் இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், எழில் பிரதர்ஸ் மூன்றாம் பரிசு ரூ.6 ஆயிரம் பெற்றனர். 43 பிரிவில் முதல் பரிசு நேஷனல் ஆத்தூர் ரூ. 12 ஆயிரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வெங்கிடு ரூ. 10 ஆயிரம், சௌமிகா சேலம் ரூ. 8 ஆயிரம் பெற்றனர்.
45 இன்ச் பிரிவில் முதல் பரிசு ரூ. 15 ஆயிரம், இரண்டாம் பரிசு நேஷனல் பவானி ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 10 ஆயிரம் பெற்றது. பெரிய குதிரை பிரிவில் முதல் பரிசு கோவை பால்மணி ரூ. 20 ஆயிரம், திருச்சி நம்பி உதயசூரியன் ரூ. 15 ஆயிரம், மூன்றாம் பரிசு லீகல் லக்கி ஸ்டார் ஆத்தூர் ரூ.12 ஆயிரம் பெற்றனர்.
நினைவு பரிசுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் பவானி நகர செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர், அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கிருஷ்ணராஜ், 27-வது வார்டு கவுன்சிலர் துரை ராஜா மற்றும் பலர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.