பவானி கூடுதுறையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதி சங்கமிக்கிறது.
தினசரி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி பல்வேறு வகையான பரிகாரங்கள் செய்த பிறகு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இன்று கார்த்திகை மாத 1-ம் தேதி முன்னிட்டு பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பலர் இரட்டை விநாயகர் சன்னதி முன்பு ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஆன்மிகம்ஈரோடு மாவட்டம்ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பவானி சங்கமேஸ்வரர் கோவில்