BREAKING NEWS

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 18 மற்றும் அமாவாசை திருவிழா, அதிகமாக கூடும் பக்தர்களுக்கு முன் ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 18 மற்றும் அமாவாசை திருவிழா, அதிகமாக கூடும் பக்தர்களுக்கு  முன் ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் ஆடி 18 அன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து சாமி வழிபாட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் 28-ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடி 18 திருவிழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.

 

 

என்ற பக்தர்களுக்கு செய்யப்படும் முன் ஏற்பாடுகள் குறித்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன், நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் கோவில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். காவிரி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து அறிவிப்பு பலகைகள் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

 

பவானி நகராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் கூடும் முன்னரும் கூட்டம் முடிந்த பின்பும் கோவில் பகுதியை சுத்தம் செய்து தரப்பட வேண்டும் கிருமி நாசினி கோவில் முழுவதும் தெளிக்க வேண்டும். திருவிழாவின் போது திடீரென காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி கோவிலில் பக்தர்கள் குளிக்கவும், பரிகாரம் செய்ய தடை செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பவானி காவல்துறை உதவி ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் விஜய கோகுல், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறை, மருத்துவ துறை, பொதுப்பணி துறை, மின்சாரவாரியம் உட்பட்ட ஒன்பது துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )