BREAKING NEWS

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவிரி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கந்தன் பட்டறை மற்றும் திருவள்ளுவர் நகர் போன்ற இடங்களை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானி நகர திமுக செயலாளர் நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குடியிருப்பு வாசிகள் இடம் ஆலோசனை வழங்கினர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.ஆர்.துரை, 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாரதா, 4-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், திமுக கட்சி நிர்வாகிகள் செல்லப்பன், இந்திரஜித் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )