பவானி நகருக்கு வருகைதர உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி எம்.பி., வருகைதர உள்ளார். இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பாலாஜி பத்மாவதி திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்தி கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று முதல் முதலாக பவானி நகருக்கு வருகை தரும் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது பற்றியும் பவானி நகரில் சௌடேஸ்வரி அம்மன் கோவில் தேர் வீதி சந்திப்பில் மேடை அமைத்து பிரம்மாண்ட கூட்டம் நடத்துவது பற்றி கட்சி நிர்வாகிகள் இடைய விளக்கிப் பேசினார்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பரமசிவம், வெங்கடாசலம், மாநில துணை தலைவர்கள் கோபால், பரமேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, கிழக்கு மாவட்ட செயலாளர் ராசு, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் முனுசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட பொருளாளர் திலகம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி இளம்பெண்கள் அணி தலைவர் நளினி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
