பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,
பவானி நகர அதிமுக சார்பில் காமராஜ் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி காமராஜ் நகர் பகுதியில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், பவானி எம்.எல்.ஏ., கே.சி. கருப்பணன் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மாதையன், பவானி சொசைட்டி தலைவர் பெரியசாமி, முன்னாள் நகரச் செயலாளர் ஜூகுனு பாலூ,
பவானி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துச்சாமி ஈஸ்வரமூர்த்தி, ஐ.டி.விங் நிர்வாகிகள் பிரபாகரன், பிரகாஷ் மற்றும் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS அதிமுகஅதிமுக கட்சி கொடி ஏற்று விழாஅரசியல்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பவானி நகர அதிமுக