BREAKING NEWS

பவானி நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பவானி நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு மாவட்டம்,

திமுக மாநில இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்றார்.

 

இதனை கொண்டாடும் வகையில் பவானி நகர திமுக சார்பில் மேட்டூர் மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்தும், பஸ் பயணிகள் பொதுமக்கள் என பலருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் பவானி நகர அவை தலைவர் மாணிக்கராஜ், பவானி நகர இளைஞர் அணி அமைப்பாளர் இந்திரஜித், பவானி நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணி, விஜய் ஆனந்த், மோகன்ராஜ், கார்த்திகேயன், கோயிலாம்பாள்,

கவிதா மற்றும் முன்னால் கவுன்சிலர் சரவணகுமார், நிலவள வங்கி தலைவர் சித்தையன், கூட்டுறவு சொசைட்டி தலைவர் சிங்காரம், ராஜசேகர், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )