பவானி நகர தி.மு.க. செயலாளராக நான்காவது முறையாக ப.சீ. நாகராசன் தேர்வு.

தேர்வு செய்யப்பட்ட அவர் கட்சி தலைவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஈரோடு மாவட்டம், பவானி நகர 15-வது திமுக உட்கட்சி தேர்தல் கடந்த மே மாதம் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் பவானியில் நடைபெற்றது.

நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் பவானி நகர திமுக அவை தலைவராக ராஜமாணிக்கம், நகரச் செயலாளராக தற்போதைய நகர செயலாளர் (நான்காவது முறையாக) ப.சீ நாகராசன் மாவட்ட பிரதிநிதி நல்லசிவம், மற்றும் கட்சி நிர்வாகிகளாக எஸ்.பி. முருகேசன், வெ. ரவி, சின்னம்மாள், எம். ராஜசேகர், த. ராஜசேகர் ஆகியோர் தலைமை கழகத்தின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பவானி நகர திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அன்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. புதிய நகரச் செயலாளராக நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்ட ப.சீ. நாகராசனுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும் கேக் வெட்டிக் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகர்மன்ற உறுப்பினர்களான வடிவேல், சுப்பிரமணி, மோகன்ராஜ், கார்த்திகேயன், விஜய ஆனந்த், பாரதிராஜா, கவிதா, ரஜீயா பேகம், மற்றும் கு. செல்வராஜ், தவமணி, அழகுசிவபிரகாசம், இந்திரஜித், இளங்கோ, வார்டு செயலாளர்கள் உட்பட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.
