பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு மாவட்டம்,
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கிராமம் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று காலை சென்னையில் நகர வார்டு சபா கூட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பவானி நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் இந்த நகர வார்டு சபா கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தனது 24 வது வார்டில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அழைப்பிதழ் ஒன்றை அச்சடித்து வீடு வீடாகச் சென்று அந்த அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
அழைப்பிதழ் வழங்கி வீடு வீடாகச் சென்று நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் அடித்து கொடுத்த இச்சம்பவம் அந்த வார்டு பகுதியில் உள்ள மக்களை மிகுந்த மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.