பவானி போலீஸ் ஸ்டேஷனில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு..!!
கோவை டி.ஐ.ஜி. எம்.எஸ். முத்துசாமி பவானி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார்.
கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம். எஸ். முத்துசாமி IPS பவானி போலீஸ் ஸ்டேஷனில் பவானி வட்டத்திற்க்கு உட்பட்ட பவானி மற்றும் ஆப்பக்கூடல் காவல் நிலையங்களின் அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.
மேற்படி இரண்டு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர் ஆன எம். கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் ரகுநாதன், அசோகன், மகேஷ்வரி, கோவிந்தராஜன், சரவணன், கெஜலட்சுமி மற்றும் அனைவரின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.
அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து வெகுவாக பாராட்டினார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார்.
காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனக் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி. சசிமோகன், IPS மற்றும் பவானி காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.