BREAKING NEWS

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தனர்.

பாக்கம் பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எத்திராஜ நினைவாக காளை விடும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். காளை விடும் போட்டிக்கு அரசின் நிலையான அனுமதி பெற்று இன்று எருது விடும் போட்டியானது நடைபெற்றது.

 

 

இப்போட்டியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வந்திருந்தனர்.

 

சுமார் 200க்கும் மேற்ப்பட்ட காளைகள் வரை பங்கேற்ற இப்போட்டியில் முதல் பரிசாக 55,000 இரண்டாம் பரிசாக 42,000 சவரன் தங்க நகையும்  மூன்றாவது பரிசாக 33,000 ரூபாயும் என துவங்கி 30 பரிசுகள் வரை வழங்கப்பட்டது.

 

 

காலை 10.00மணிக்கு துவங்கிய போட்டியானது பகல் 2.00 மணிவரை நடைபெற்றது.

காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள்  வித விதமான அலங்காரங்கள் செய்து இருந்தனர் விழாக் குழுவின் மூலம் காளைகளுக்கு காலையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது 200க்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டது. மேலும் மஞ்சுவிரட்டு போட்டியின் போது  காளைகள் முட்டியதால் 10க்கும் மேற்ப்பட்ட பார்வைகாளர்கள் காயமடைந்தனர்.

 

 

போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  மேலும் மஞ்சு விரட்டு போட்டியின் போது  குடியாத்தம் தீயணைப்பு மீட்பு பணித் துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தின் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

CATEGORIES
TAGS