பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் என்று வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுக கிடையாது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் திமுக அரசை கண்டித்து வரும் 9,13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து,..
கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் விஜய்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,
வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, பால்ராஜ், மகேஷ், தன இந்தியன், தணபதி ஜவகர், சண்முகவேல், செங்கான், லட்சுமண பெருமாள்,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,
ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமாள், மாவட்ட அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,
முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன்,கோபி,பழனிகுமார்,ஜெய்சிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில்:
தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு..
நீட்தேர்வு, கல்விக்கடன், குடும்ப தலைவி மாதம் 1000 தொகை பழைய ஓய்வு, ஊதிய திட்டம், எவற்றையும் திமுக நிறை வேற்ற வில்லை
மக்களின் உணர்வுகளை ஆதரித்து மக்களின் உணர்வாக பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் போராட்டம் மற்றும் நடைபெற உள்ளது. அது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
9.13.14 ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற உள்ளது. பாஜக தமிழகத்தில் காலூன்ற எடப்பாடி பழைச்சாமி தான் காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு கூட்டணி கட்சி ஏற்பவும் காலத்திற்கு ஏற்ப கம்யூனிஸ்ட் கட்சி பேசி வருகிறது.
கம்யூனிஸ்ட் போராட் வேண்டிய போராட்டத்தை நாங்கள் நடத்தி கொண்டு இருக்கிறோம், கோவை செல்வராஜ் காலாவதியான அரசியல் வாதி இடையிலே வந்தவர் இடையிலே போய் உள்ளார்..
அதிமுக திமுகக்கு உள்ள என்ன வேறு பாடு என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் ஆர் பாரதி அடக்கமுடியாத கருத்தை தான் ஆர் பாரதி கூறி உள்ளார் இது தான் நிதர்சனம்…
டிடிவி அமமுக வளர்ச்சி மட்டும் பார்க்கட்டும் அதிமுக வளர்ச்சியை பற்றி கவலை பட வேண்டியது இல்லை.. 10 % சதவீத இட ஒதுக்கீடு. மத்திய அரசு கொள்கை ரீதியாக கொண்டு உள்ளது.
தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி சந்தித்து வருகிறோம். ஆனால் பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுகவினர் கிடையாது..
அதிமுக காரர் இருந்தால் அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்லி இருப்பார் இதில் இருந்தே தெரிகிறது அவர் அதிமுக இல்லை என்று…
கோவில்பட்டி, விளாத்திகுளம் கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டம் பணியை திமுக புதிய பெயர் வைத்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.