பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கிய அறிவுரைகள் போல், தற்போதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கட்டிடங்களில் எங்கே தண்ணீர் வடிகிறதோ, மேலும் ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விடுங்கள் என கூறியுள்ளோம். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்.
பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டுகளை கண்காணிக்க வேண்டும், பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு உள்ளோம். கிராமப்புற உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.