BREAKING NEWS

பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த விவசாயி.

பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த விவசாயி.

உடுமலை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி விவசாயி இவர் மனைவி ஜோதிமணி மகன்கள் இளமுகில் கார்த்திகேயன் தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள் பேரன் பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நடப்பதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கி இருப்பதாக கூறி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரவு அங்கே வந்தனர்.

 

 

இது குறித்து அவர்கள் கூறியதாவது: குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை அதனால் கடன் கொடுத்தவர் நம்பிக்கை க்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது கொலை மிரட்டல் எடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே வீட்டில் தங்குவதற்காக அச்சமாகமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அல அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கி இருக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )