பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
![பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-06-at-3.16.37-PM-e1670320562119.jpeg)
திருநெல்வேலி மாவட்டம்,
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதனடிப்படையில் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை தொகுதி செயற்குழு உறுப்பினர் அசன் காதர் வரவேற்புரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, அமைப்பு பொதுச்செயலாளர் எம்.எஸ்சிராஜ், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், வழக்கறிஞர் முகம்மது ஷபி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக்,விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாவட்ட தலைவர் மும்தாஜ், விசிக மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணை செயலாளர் எம்.சி கார்த்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வலியுறுத்தினார்கள் இதில் பெண்கள் உட்பட 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் பத்தமடைநகர தலைவர் ஷெரிப் நன்றியுரையாற்றினார்.