BREAKING NEWS

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

 

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அஹமது நவவி, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துறை முருகன், ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாவட்ட பொருளாளர் மவுலானா அமீன் யூசுஃபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால் முகமது, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ரூதின் உட்பட கலந்துகொண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )