BREAKING NEWS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மர்ம நபர்கள்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மர்ம நபர்கள்.

தருமபுரி-சேலம் மாவட்டம் இடையே ஓமலூர் ராமமூர்த்தி நகர் ரெயில்வே தண்டவாளம் அருகில் இன்றுகாலை 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதன் பேரில் தீவட்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

 

அப்போது ஒரு வேனில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் உடலை தண்டவாளம் அருகில் வீசி விட்டு சென்றதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )