BREAKING NEWS

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது பதுக்கி விற்பதாக அரூர் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில்,

 

எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான பார்த்தசாரதி சரவணன் உள்ளிட்ட சிறப்பு காவலர்கள் வெங்கடசமுத்திரம், மாரியம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

ஆய்வின் போது மாரியம்பட்டி பகுதி சேர்ந்த கிருஷ்ணன் வயது 60,  வெங்கடசமுத்திரம் பகுதி சேர்ந்த முத்து வயது 55, ஆகிய இருவரிடம் 99 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS