BREAKING NEWS

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஆவாரம் பூக்கள் மஞ்சள் மலை, வகுத்துமலை, சாத்தியார் மலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் மலை அடிவார கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவாரம் பூக்கள் தற்போது தை பொங்கலை வரவேற்க பூத்து குலுங்கி காணப்படுகிறது.

 

இந்த பூவானது பல மருத்துவ குணங்களை பெற்றிருந்தாலும் சர்க்கரை நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்தப் பூக்களை தைப்பொங்கல் அன்று கூரை பூ, வேப்ப இலை, மாவிலை, மற்றும் ஆவாரம் பூவையும் வைத்து சாமி கும்பிட்டு வீடுகளுக்கும், வாகனங்களுக்கும், கோவில்களிலும், விவசாய நிலங்களிலும் இணைப்பார்கள். 

 

வருகிற ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல் திருநாள் வருகிறது. இதையொட்டி மருத்துவ குணம் நிறைந்த இந்த ஆவாரம் பூக்களை தற்போதே விவசாயிகளும், வியாபாரிகளும் சேகரிக்க தொடங்கி விட்டனர்.

 

CATEGORIES
TAGS