பாலமேடு வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 50ஆம் ஆண்டு அன்னதான விழா.

மதுரை மாவட்டம் பாலமேடு நாடார் தெருவில் உள்ள கஜேந்திரன் விவசாய பண்ணையில் அமைந்திருக்கும் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி பாதயாத்திரை குழு சார்பாக 50 வது ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது.
இதற்காக வெளியூர்களில் இருந்து வருகை தந்த 200க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு குருநாதர் கஜேந்திரன் மற்றும் தொழிலதிபர் கண்ணன் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் கோவிலில் பல்வேறு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சாதுக்களுக்கு காவி வேட்டி வழங்கி அன்னதானம் நடைபெற்றது. இதில் பொதுமக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் குடும்பத்தார் மற்றும் பழனி பாதையாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பழனி பாதயாத்திரை குழுபாலமேடுமதுரை மாவட்டம்ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா