பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ஜெனார்த்தனம், கண்ணன், சந்திரசேகரன், சந்தோஷ்குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் ஏ.ஆர்.சந்திரகாசன்,போஸ் (எ)அருணாசலம் கலந்து கொண்டு விழா பேருரையாற்றினர்.
முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பவுன்ராஜ், முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பின்னர் பெண்களுக்கு சேலைகளும் ஆண்களுக்கு தென்னை மரக்கன்றுகளும் மாவட்ட செயலாளர் வழங்கினார் நிகழ்ச்சி முடிவில் பாலையூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜா நன்றி கூறினார்.