BREAKING NEWS

பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்; ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை: அசத்தப்போகும் தமிழக அரசு!

பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்; ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை: அசத்தப்போகும் தமிழக அரசு!

ஆவின் நிறுவனம் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் சார்பாகத் தமிழகம் முழுவதும் 28 பால் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் பால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அந்த தண்ணீரை விற்பனை செய்யத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் மூலமாக தண்ணீர் விற்பனை செய்யும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது.
இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவிக்கையில், “ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆவின் உற்பத்தி பொருட்களின் மீது தனியார் விளம்பரங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவினுக்குக் கட்டணம் செலுத்தி சினிமா மற்றும் தனியார் நிறுவன விளம்பரங்களைத் தண்ணீர் பாட்டில் மற்றும் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். பேருந்து நிலையம், ஆவின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை விற்பனை செய்வதன் மூலமாக ஆவின் நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )