BREAKING NEWS

பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி வருகை தந்து ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கிய அவர்,
இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து காரில் சென்று தூத்துக்குடி வ உ சி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடி பின்னர் நாட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒட்டு மொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

CATEGORIES
TAGS