பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வேலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! நடைபெற்றது.!
இவ்விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.
அவர்களுடன் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி மற்றும் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.