BREAKING NEWS

பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.

பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகின்ற 27-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

 

அதனை முன்னிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் நிவாஸ் நிவேதா முருகன், கேபிரிள்ராஜ், வினோத் ஆகியோர், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவுகளை மயிலாடுதுறை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வழங்கினர்.உபகரணங்களை பெற்றுக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆதரவற்ற குழந்தைகள் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )