புகழ்ந்து தள்ளிய ரஜினி.. மெய்சிலிர்த்துப்போன விக்னேஷ் சிவன்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார். அனைவர்க்கும் பிடிக்கும் வகையில், மிகவும் பிரம்மாண்டமாக இந்த கலை நிகழ்ச்சிகள் இருந்ததால், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனை நேரில் பாராட்டியதோடு மட்டுமில்லாமல், போனில் தொடர்பு கொண்டும் பாராட்டியுள்ளாராம். இதனால் நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன் ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ” சூப்பர் ஸ்டாருக்கு நன்றி இது நினைவூட்டும் நிகழ்வு… நிகழ்வின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும் நிகழ்வு முடிந்த உடனேயே தொலைபேசி அழைப்பிற்கும். ஒலிம்பியாட் நிகழ்வில் உங்கள் குரலையும் பாராட்டுக்களையும், கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.