BREAKING NEWS

புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் சார்பில் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நகர ஏசிஎஸ் பேரவை செயலாளர் ம.சசிகுமார், நகர பொருளாளர் சத்தியமூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி, துணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் பொறுப்பாளர்கள் குமரவேல், மோகன், திருநாவுக்கரசு, வினோத்குமார், எல்ஐசி சிவா, சுந்தரமூர்த்தி, சுந்தரேசன், கன்னியப்பன் மற்றும் நகர மகளிர் அணி பொறுப்பாளர்கள் யசோதா, ஹேமலதா, மால்கி, தேவலக்ஷ்மி, லக்ஷ்மி மற்றும் புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் கணபதி, சுமன், வசந்த்குமார், பூவரசன், புவனேஷ், பிரபு, தருண் ஆகியோர் மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும், அதிமுக மற்றும் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

CATEGORIES
TAGS