புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி; ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி ஊராட்சி மணியாச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரத்தினவேல், மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,
வடமாலாபுரம் கிளை செயலாளர்முருகன், கந்தசாமிபுரம் கிளை செயலாளர் ராமகிருஷ்ணன்,
கீழக்கோட்டை கிளை செயலாளர் கோமதி, சுந்தராஜபுரம் கிளை செயலாளர் மகாராஜா,
K.கைலாசபுரம் கிளை செயலாளர் முருகன், சொக்கநாதபுரம் சுரேந்தர்,
மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.