புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கல்!
புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கல்!
புதுச்சேரி பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் உலக உயர் ரத்த அழுத்த நாளை முன்னிட்டு இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக புனித வளனார் கல்லூரியில் பயிலும் வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் ரஞ்சித், அந்துவான் டேனியல், பிரவீன், சசிதரன், இளஞ்செழியன் மற்றும் சுஜி வெங்கடேஷ் ஆகியோர் மேற்பார்வையில் சாலையோரம் வசிக்கும் வயதான மக்களுக்கு இரவு உணவுகள் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் இதுபோன்ற ஆக்கப்பூர்வ செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களுக்கு மிகத் தாழ்மையுடன் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் முனைவர். லோ. விஜயகுமார் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized