BREAKING NEWS

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்காசுகள் வழங்கல்!

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொற்காசுகள் வழங்கல்!

புதுச்சேரி பெணவொலண்ட் அமைப்பு சார்பில் பாப்பான்சாவடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் 2024-25 ஆம் ஆண்டில் 10 மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வெள்ளி பொற்காசுகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.

இதற்கு உறுதுணையாக சபரி , ரஞ்சிதா , உமா சங்கர், நல்லசிவம் செயல்பட்டனர். இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்த பெணவொலண்ட் அமைப்பு பொருளாளர் ரகோத்தமன் மற்றும் பெணவொலண்ட் அமைப்பு தலைவர் முனைவர் லோ. விஜயகுமாருக்கு பரிசு பெற்ற மாணவிகள் நன்றி கூறினர்.

இந்த பரிசு வழங்கும் விழா ஆண்டுதோறும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், கௌரவிக்கும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் பரிசளிப்பு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Share this…

CATEGORIES
TAGS