BREAKING NEWS

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலைய அதிகாரி மீதும், வார்டு கவுன்சிலர் கணவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட மயிலாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் கோவில் நிலம் 32சென்ட் தொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கின்ற பொழுது கோவிலில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காக எட்டாவது வார்டு கவுன்சிலர் லாவண்யா சுரேஷ் தலைமையில் ஒரு சில நபர்களை தூண்டிவிட்டும் பிரச்சனைகளை உருவாக்க கோவில் திருவிழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட அருள் என்பவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்து கூறுகையில்… புது பட்டியில் எட்டாவது வார்டு கவுன்சிலர் லாவண்யா -சுரேஷ் தூண்டுதலின் பேரில் கோவில் திருவிழாவில் கலவரம் ஏற்பட்டது இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரி வார்டு கவுன்சிலரின் கணவர் சுரேஷ் தூண்டுதலில் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு விசாரணை செய்யாமல் தன்னை சரமரியாக தாக்கியதாக காயம் அடைந்த அருள் கூறினார்.

மேலும் இந்த கலவரத்தை ஏற்படுத்த உறுதுணையாக இருந்த வார்டு கவுன்சிலர் கணவர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி ஐயா அவர்களுக்கும் மற்றும் திமுக கட்சிக்கும் கலங்கம் ஏற்படுத்தும் விதமாக இருக்கும் அவர் மீதும், தன்னை தாக்கிய காவல் அதிகாரி மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பேட்டி அளித்து கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS