BREAKING NEWS

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

 

இதனை தொடர்ந்து புளியங்குடி டிஎஸ்பி அசோக் ஆலோசனையின்படி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிபடை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்க போலீசார் சென்றபோது தப்பி ஓடினர்.

 

அப்போது போலீசார் வளைத்து பிடித்ததில் புளியங்குடி கற்பக விதியைச் சேர்ந்த காசித்துரை, மருதுபாண்டி, கிருபாகரன், விக்னேஷ் ராஜன், திருப்பதி என 6 பேர் பிடிபட்டனர்.

 

மேலும் நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர் அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் பணம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயும் 4 பைக் ஒரு ஆட்டோ இரண்டு கிலோ கஞ்சா இரண்டு அருவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

CATEGORIES
TAGS