புளியங்குடி 12வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு கோட்டைத் தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் முகைதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்கள் அம்மனுவில் புளியங்குடி நகராட்சி 12வது வார்டு பகுதி கோட்டைத் தெரு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 60 வீடுகளுடன் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி நடைபாதையும் இன்றி குடியிருந்து வருகிறோம் நகராட்சிக்கு முறையான தீர்வையும் கட்டி வருகிறோம் ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை எங்கள் தெருவுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் தரமான குடிநீர் மற்றும் வடிகால் வசதி பாதை அமைத்துத் தரவில்லை நகராட்சி ஆணையர்கள் முறையே முருகேசன் பவுன்ராஜ் கிருஷ்ணமூர்த்தி குமார் சிங் ஆகிய நால்வரும் இதுவரை 12 முறை பொதுமக்கள்தான் சென்று மனு அளித்தும் எவ்வித பலனுமில்லை தெருவிற்கு வந்து பார்வையிட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி சென்றுவிடுகிறார்கள் எங்களுக்கான தீர்வு இதுவரை செய்து சரி செய்து தரவில்லை குழந்தைகள் மழைக்காலங்களில் பள்ளிக்குச் செல்லவே பாதை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் வயதானவர்கள் அவசர சிகிச்சை பெற ஆட்டோ தெருவிற்கு உள்ளே வந்து செல்லவும் சரியான பாதை இல்லை பிரிவிற்கான பாதை ஓடையை ஒட்டி உள்ளது அதையும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகின்றனர் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை ஆகவே தயவு கூர்ந்து 12வது வார்டு பகுதியை பார்வையிட்டு நடைபாதை அமைத்து தரவும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் முகைதீன் புளியங்குடி நகர தலைவர் அருணாசலம் நகர தொழிற்சங்க செயலாளர் எஸ் கணேசன் பொதுமக்கள் சார்பாக 12வது வார்டு இஸ்மாயில் மைதீன், செய்யது அலி பாதுஷா, 17வது வார்டு செயலாளர் மைதீன் பிச்சை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
