பூமியை நோக்கி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்து செல்லும் சிறிய கோள்! விஞ்ஞானிகள் தகவல்!!
பூமியை நோக்கி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்து செல்லும் சிறிய கோள்! விஞ்ஞானிகள் தகவல்!!
சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளனர்.
வருகிற 16ம் தேதி அதிகாலை 2.48 மணிக்கு பூமியை சிறுகோள் ஒன்று நெருங்கி வருகிறது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இதற்கு ராட்சத விண்வெளி சிறுகோள் சிறுகோள் 388945 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள் இந்த சிறுகோள் 1,608 அடி அகலமும், 1,454 அடி உயரமும் கொண்டுள்ளது. இதன் உயரம் இது நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை ஒத்துஉள்ளது என்றும், ஈபிள் கோபுரம் மற்றும் லிபர்ட்டி சிலையை விட பெரிய அளவில் உள்ளது என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சிறுகோள் பூமியை நெருங்கி வரும்போது பூமியை தாக்க நேர்ந்தால் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைவிடுக்கும் போதிலும், பூமியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் இந்த சிறு கோள் நம்மை கடந்து செல்லும் என்று விண்வெளி விஞ்ஞானிகளின் கணக்கீடுகளின் படி நாசா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த சிறிய கோள் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்றது.
இந்த சிறிய கோளானது சூரியனைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை பூமியைக் கடந்து செல்கிறது என நாசா தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2024ம் ஆண்டு மே மாத 6.9 மில்லியன் மைல்கள் தூரத்தில் இந்த சிறுகோள் பூமியை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளிப் பாதையில் சிறுகோள்கள், விண்வெளி குப்பைகள், ஒரு கிரகத்தின் எச்சங்கள் போன்றவை சுழன்று கொண்டிருப்பது வழக்கம். ஆனால் பெரிய அளவிலான பாறைகள் சுழற்சிபாதையில் பூமியை நோக்கி வரும் போதுதான் பெரிய ஆபத்தை விளைவிக்கும் அபாயம் ஏற்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சிறிய கோள் பூமியை நெருங்கி வந்தாலும் எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.