BREAKING NEWS

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், செய்தியாளர்- இரா.யோகுதாஸ்.

தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை இதனை முன்னிட்டு,,

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்தனர்.

இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

CATEGORIES
TAGS