பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலாத்துறை சார்பாக பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான உரி அடித்தல் போட்டி, கரகம், காவடி, கட்டகால், சிலம்பாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
விழாவில் சுற்றுலாத்துறை அலுவலர், த. அரவிந்த குமார். காவேரிபூம்பட்டினம் ஊராட்சி மன்றத்தலைவர் சசிக்குமார். சுற்றுலா அலுவலக பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் காவிரிப்பூம்பட்டினம் மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிகளை பார்த்து கண்டுகளித்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் பொங்கல் திருவிழாபொங்கல் திருநாள் விழாமயிலாடுதுறை மாவட்டம்