BREAKING NEWS

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி நல்லாடை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர்அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் சிவதாஸ், ராமச்சந்திரன், சுரேஷ், மருது, ஜூபையர் அகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தீர்மான குழு உறுப்பினர் ஆர்.டி.சபாபதி.மோகன், நக்கீரன் இதழின் இணை ஆசிரியர் கோவி.லெனின் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்புரையாற்றினார்.

இதில், மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆர்.அருள்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.சித்திக், ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கொக்கரக்கோ. சௌமியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் மற்றும் செம்பை ஒன்றிய திமுக நிர்வாகிகள், தரங்கை பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )