பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல். இரண்டு பேர் கைது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கர்நாடக KA 05 AK5685 பதிவெண் கொண்ட வேனை சோதனை செய்த போது தனி தனி பார்சல்கள் இருப்பதை கண்டு இது குறித்து வேன் ஓட்டுனர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். சந்தேகம் அடைந்த காவலர்கள் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்த பள்ளிகொண்டா காவல் துறையினர் பெங்களூரை சேர்ந்த ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
