BREAKING NEWS

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!

பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். திமுக பிரமுகர். இவர் பொதுவாக வலைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசி பதிவு செய்பவர் ஆவார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை கேவலமாகப் பேசி வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதனை கண்டித்து பாஜக வேலூர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் மஞ்சு, நகர தலைவி ரேகா, செயலாளர் ஸ்ரீதேவி, மாவட்ட துணைத்தலைவி ப்ரியா, செயலாளர் கவிதா, செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி துடப்பம், முறத்துடன் குமரன் வீட்டு முன் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அவரை கண்டித்து வசைபாடினர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS