BREAKING NEWS

பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி.

பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடையில் இயங்கிவரும் ஃபாத்திமஹ் (ரள்ழி) பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி- 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியானது நேற்று மாலை நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் இஸ்லாமிய கல்வி கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 75 க்கும் மேற்பட்ட மாணவிகள் குர்ஆன் சூராக்கள் கலிமாக்கள் மனப்பாடம் செய்து பார்க்காமல் ஓதி காண்பித்தனர்.

 

பின்னர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் சமூகத்திற்கு சீர்திருத்தமான செய்திகளை எடுத்துரைத்தனர்.பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதரஸாவின் தலைவர் அப்துல் அஜீஸ், பொருளாளர் நஜிமுல்லாஹ், செயலாளர் முஹம்மது இக்பால்.

 

துணை செயலாளர் ரபீக் அலி, கல்லூரி பேராசிரியைகள் ஆலிமா நாஜிலா ஹைர், ஆலிமா லிசாபானு, ஆலிமா பாத்திமா அஸ்மின் ஆகியோர் செய்திருந்தனர் இதில் எராளமான பெண்கள் ஆண்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS