பெண்கள் சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பின் மூலம் நபார்டு வங்கியின் உதவியுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடனுதவி வழிகாட்டுதல்.
செய்தியாளர் க.கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா T. மணல்மேடு ஊராட்சியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்கள் சமூக அறக்கட்டளை சார்பாக மகளிர்களுக்கான சுய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும்,
நபார்டு வங்கியுடன் பெண்கள் சமூக அறக்கட்டளை இணைந்து மகளிர்கான கடனுதவி பெறுவது. மேலும் திட்டங்கள் எவ்வாறு குழுகள் அமைத்து பயன் பெறுவது என்பது குறித்து சமூக அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயந்தி,
மாநில தலைவர் தேவகி ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்கள பற்றியும் திட்டங்கள் எவ்வாறு நபார்டு வங்கியின் உதவியுடன் கடன் பெறுவது என்பது குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
சமூக அறக்கட்டளையின் திட்டங்களை செயல்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர்கள் புனிதா மற்றும் செல்வி ஆகியோர் வழங்கினர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து மாடு, ஆடுகள் வளர்ப்பு பற்றியும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் எவ்வாறு நபார்டு வங்கியின் மூலம் கடன் பெற முடியும் என்பது பற்றியும் கருத்துக்களை மகளிர் சுய உதவி குழுக்களிடம் பகிர்ந்தும் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் 3க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்